வாசகர் வட்டம் I
பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் நடத்திய வாசகர் வட்டம் இன்று (29-07-2024) இனிதே நடந்தேறியது. எஸ் ஆர் எம் ஐ எஸ் டி ராமாபுரம் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன் ப கவிதா அவர்கள் வரவேற்புரையை வழங்கி வாசகர் வட்டத்தினை சரியாக 2.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
முதலாவதாக செல்வி. ஸ்ரேயா செந்தில்நாதன் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப மாணவி ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களது படைப்பை இரசிக்கும்படி எடுத்துரைத்தார்.
அடுத்ததாக செல்வன். அருண் வர்ஷன் இருண்ட வீடு என்ற புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் படைப்பை அதன் சாரம் குறையாமல் விருந்து படைத்தார்.
இறுதியாக இயற்பியல் துறை இணை பேராசிரியர் முனைவர் செந்தில் அவர்கள் காவல் கோட்டம் எனும் ஆசிரியர் சுவெங்கடேசன் அவர்களுக்கு படைப்பை அச்சுவசலாக ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் எடுத்துரைத்தார்
பங்குபெற்ற அனைவரும் நடைபெற்ற வாசகர் வட்ட நிகழ்வினை மிகவும் சுவாரசியமாக கண்டுகளித்தனர்
நிகழ்ச்சியின் இறுதியாக வேதியியல் துறை இணை பேராசிரியர் முனைவர் கிசி யோகானந்த் முடிவுரையை வழங்கினார்.
வாசகர் வட்டம் II
பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் நடத்திய வாசகர் வட்டம் இன்று (29-08-2024) இனிதே நடந்தேறியது. எஸ் ஆர் எம் ஐ எஸ் டி ராமாபுரம் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன் ப கவிதா அவர்கள் வரவேற்புரையை வழங்கி வாசகர் வட்டத்தினை சரியாக 2.30 மணிக்கு தொடங்கி வைத்தார்.
முதலாவதாக செல்வன். ஜெயேஷ்.டி இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் மாணவன் அழகின் சிரிப்பு என்ற பாவேந்தர் பாரதிதாசனின் படைப்பை இரசிக்கும்படி எடுத்துரைத்தார்.
அடுத்ததாக முனைவர். வஸ்தி ஞான ராணி அவர்கள் நூறு நாற்காலிகள் என்ற எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் படைப்பை அதன் சாரம் குறையாமல் விருந்து படைத்தார்.
பங்குபெற்ற அனைவரும் நடைபெற்ற வாசகர் வட்ட நிகழ்வினை மிகவும் சுவாரசியமாக கண்டுகளித்தனர்
நிகழ்ச்சியின் இறுதியாக ஆங்கிலத் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் நாகமணி அவர்கள் முடிவுரையை வழங்கினார்.