தமிழ்ப்பேராயம்

‘‘தமிழ்ப்பேராயம்தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு பணிப்புலம் ஆகும். தனக்கெனத் தனி அடையாள முத்திரை கொண்டதாய் இவ்வமைப்பு விளங்குகிறது.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திரு. இராமசாமி நினைவு(SRM) அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், கலையியல், மானுடவியல் வேளாண்மையியல், சட்டவியல் போன்ற பல்வேறு துறைகளில் கல்வியை வழங்கிச் சிறப்பான கல்விச்சேவையில் ஈடுபட்டுவருகிறது. வெள்ளிவிழா கண்ட நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிற நிலையில்   தமிழ்மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை உணர்த்த தமிழ்ப்பேராயம் என்னும் அமைப்பை 03 பிப்ரவரி 2011-இல் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் தா.இரா. பாரிவேந்தர் உருவாக்கினார்.

‘‘தமிழ்ப்பேராயம்தமிழ்மொழி வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு பணிப்புலம் ஆகும். தனக்கெனத் தனி அடையாள முத்திரை கொண்டதாய் இவ்வமைப்பு விளங்குகிறது.

இந்திய நடுவண் அரசின் சாகித்திய அகாதெமி இந்திய மொழிகளுக்கு எத்தகைய பணிகளைச் செய்கிறதோ அதேபோன்று தமிழ்மொழிக்கு ஆக்கப் பணிகளைச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டது தமிழ்ப்பேராயம் (Thamizh  Academy). இந்தத் தமிழ்ப்பேராயத்தின் பல்வேறு பணித்திட்டங்களைத் தமிழ்ப்பேராய மையப் பணிக்குழு (Central Executive Cell – Tamil Perayam-CEC-TP) செயல்படுத்துகிறது.

 

நோக்கம்: (VISION)

துறைதோறும் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்தல், அரிய நூல்களையும் புதிய ஆய்வு நூல்களையும் வெளியிடல், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அறிஞர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்தல், தமிழ்ப் பண்பாடு மற்றும் சமயம் தொடர்பான பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகளை நடத்துதல், உலக அளவில் தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை ஆற்றுதல்.

 

செயல்பாடு : (MISSION)

தமிழில் வழிபாடு நடத்துவதற்கான பட்டய வகுப்பை நடத்தி வருதல், வள்ளலார் மற்றும் திருமூலர் தொடர்பான பட்டயம் மற்றும் சான்றிதழ் வகுப்புகளை நடத்துதல், செவ்விலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், மூத்த தமிழறிஞர்களால் எழுதப்பட்ட நூல்களை வெளியிடுதல், தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தி அக்கட்டுரைத் தொகுப்புகளை நூலாக வெளியிடல், ‘‘செவ்வி’’ என்ற காலாண்டு ஆய்விதழை வெளியிடல், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் மூலமாகப் பல்வேறு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி மாணவர்களின் ஆற்றல்கள் வெளிப்பட வாய்ப்பளித்தல். மாணவர் மன்றம் மூலமாக ‘‘வேந்தர் நெறி’’ என்ற காலாண்டு இதழை நடத்துதல்